நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஓடுறதில்ல… ஏன்? அஜித்தின் கோபமான பதில்!

நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஓடுறதில்ல… ஏன்? அஜித்தின் கோபமான பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் அஜித். அவரது நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியானது என்றாலே அது மாபெரும் வெற்றி படமாக ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் நேர்காணல் எடுப்பவர்,” நீங்கள் திரைப்படங்களில் நன்றாக நடித்தாலும் அந்த திரைப்படம் சரியாக ஓடுவதில்லை ஏன் ?அதற்கான காரணம் என்ன ? என கேட்டதற்கு….

கடும் கோபத்தோடு பதில் அளித்த அஜித், “நான் ஒரு நடிகன். நடிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை. படம் ஓடினால் அதற்குக் காரணம் இயக்குனர். ஆனால் அதே படம் தோற்றால் எப்படி ஒரு ஹீரோ காரணமாக முடியும்? படம் எப்படி ஓடுகிறது என தெரிந்தால் நான் இயக்குனர் ஆகியிருப்பேன். நடிகராக இருந்திருக்க மாட்டேன். எனவே படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் தவறு. என்னுடைய தவறு அல்ல என கடும் கோபத்தோடு பேசியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.