அம்மா மரணத்திற்கு பிறகு டோட்டலா மாறிட்டேன் – ஜான்வி கபூர் Open Talk!

அம்மா மரணத்திற்கு பிறகு டோட்டலா மாறிட்டேன் – ஜான்வி கபூர் Open Talk!

பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை ஸ்ரீதேவி தமிழிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து இங்கும் பிரபலமான நடிகையாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது அம்மா மரணத்திற்கு பிறகு நான் டோட்டலாக மாறிவிட்டேன் எனக் கூறி ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, என்னுடைய அம்மா ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு எனக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டுவிட்டது அது நம்பிக்கையா? அல்லது ஆன்மீகமா என்று சொல்ல தெரியவில்லை இருந்தாலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் திருப்பதிக்கு நான் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். நாராயணா நாராயணா என அவரது மந்திரத்தை அதிகம் இப்போது உச்சரிக்கிறேன். என ஜான்வி கபூர் கூறி இருக்கிறார்.