குடிகாரர்களால் பிரிட்டன் வருடம் ஒன்றுக்கு £27B பில்லியன் பவுண்டுகளை இழக்கிறதாம் !

குடிகாரர்களால் பிரிட்டன் வருடம் ஒன்றுக்கு £27B பில்லியன் பவுண்டுகளை இழக்கிறதாம் !

பிரித்தானியாவில் வருடம் ஒன்றுக்கு, 10.000 பேர் குடி குடி போதையால் இறக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு குடி போதைக்கு அடிமையாகும் நபர்களுக்கான வைத்தியச் செலவாக சுமார் 5B பில்லியன் பவுண்டுகளை, தேசிய சுகாதார நிலையம்(NHS) செலவு செய்கிறது. மேலும் 12 பில்லியன் பவுண்டுகள், குடி போதையால் இளைஞர்கள் ஏற்படுத்தும் சேதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  பொலிசார் வரவளைக்கப்படுவது , மேலும் தீ அணைக்கும் படையினர் வரவளைக்கப்படுவது என்று செலவாகியுள்ளது என்று, பிரித்தானிய வருமான வரித்துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மது அருந்திவிட்டு தற்கொலைக்கு முயலும் நபர்கள், காயப்படும் நபர்கள் இவர்களை காப்பாற்ற வைத்தியசாலைச் செலவும், மருத்துவர்கள் செலவும் மேலும் அம்பூலன்ஸ் செலவு என்று ஒரு வருடத்திற்கு 12.5 பில்லியன் செலவாகிறதாம். 2023ம் ஆண்டு மட்டும் சுமார் 10,408 பேர் குடி போதையில் இறந்துள்ளதாக அதிரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது 27 பில்லியன் பவுண்டுகளை பிரித்தானியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையால் பிரித்தால், தலைக்கு £562 பவுண்டுகள் வருகிறது. இதனை 12 மாதத்தால் பிரித்தால் , மாதம் சுமார் £46 பவுண்டுகள் வருகிறது. இந்த £46 பவுண்டுகளை மக்களாகிய நாமே, கட்டி வருகிறோம். தெரிந்தோ இல்லை தெரியாமலோ நாமே கட்டி வருகிறோம்.

அதாவது நாம் சம்பாதித்து , வரியாக கட்டும் பணத்தில் இருந்து மாதம் தோறும் சுமார் 46 பவுண்டுகள் இந்த குடி போதைச் செலவுக்கு தான் செல்கிறது, என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ? ஆனால் அது தான் உண்மை என்கிறது, வருமான வரித்துறை.  இந்த முழு பிரித்தானியாவில் மிக மிக மோசமான பகுதியாக நோத் ஈஸ்ட்(North East) பகுதியே உள்ளது என்பது மேலும் அதிர்ச்சியான தகவல். காரணம் அங்கே தான் பல ஆசிய மற்றும் கருப்பு இன மக்கள் வசித்து வருகிறார்கள். வெள்ளையர்கள் குறைவாக இருக்கும் பகுதி.