தம்பி அவரது மனைவி பிள்ளைகள் எவரும் உயிருடன் இல்லை- வேலுப்பிள்ளை மனோகரன் உருக்கம் !

தம்பி அவரது மனைவி பிள்ளைகள் எவரும் உயிருடன் இல்லை- வேலுப்பிள்ளை மனோகரன் உருக்கம் !

எனது தம்பி, தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் மனைவி பிள்ளைகள் எவரும் உயிருடன் இல்லை என்று தலைவர் பிரபாகரனின் அண்ணா வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள், தெரிவித்துள்ளார். இன்று மே 18 அன்று, அவர்களுக்கு நான் வீர வணக்கம் செலுத்த உள்ளதாக அவர் டென்மார்கில் இருந்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் தமிழகத்தில் உள்ள தந்தி TV க்கு கொடுத்த ஒரு செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எனது தம்பியின் இருப்பை காரணம் காட்டி பல பண வசூல்கள் நடைபெற்று வருகிறது. ஏன் துவாரகா இருப்பதாக கூறியும் பணத்தை வசூல் செய்யப் பார்கிறார்கள். எனது தம்பியின் பெயரால் நடக்கும் இந்த ஈனச் செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், இன்று மே 18 நினைவேந்தல்கள் உணர்ச்சி பூர்வமாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தான், சில ஈனப் பிறவிகள் செய்யும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசிய தலைவரின் அண்ணா வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் முதன் முறையாக உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே தலைவர் விட்டுச் சென்ற பணிகளை தமிழர்கள் ஆகிய நாம் , தொடர்வோம் என இன் நாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்வது நல்லது.