அவருக்கு புற்றுநோய்…. ஆல்யா மானசா வாழ்க்கையில் பேரதிர்ச்சி!

அவருக்கு புற்றுநோய்…. ஆல்யா மானசா வாழ்க்கையில் பேரதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் மூலமாக ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி அந்த சீரியலில் நடிக்கும் போது காதலிக்க துவங்கினர்.

பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள். அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதாவது நான் ஆரம்பத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். சினிமாவில் வாய்ப்பு தேடியபோது சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அப்போது தான் என் அப்பாவும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டு பணத்தேவைக்காக சீரியல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், எனக்கு சினிமாவை காட்டிலும் சின்னத்திரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதுவே ரொம்ப பெரிய சந்தோசம் என்றார்.