அனிருத்துடன் டேட்டிங்… கொந்தளித்த கீர்த்தி சுரேஷின் அப்பா!

அனிருத்துடன் டேட்டிங்… கொந்தளித்த கீர்த்தி சுரேஷின் அப்பா!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கீர்த்தி சுரேஷ் பின்னர் தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இடத்தைப் பிடித்தார். தனுஷ் , விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். இதனிடையே அவ்வப்போது பல பேருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

அதில் ஒன்று இசையமைப்பாளர் அனிருத்தோடு டேட்டிங் சென்றதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி பரவிய வண்ணம் இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷின் அப்பா, இது ஆதாரமற்ற விஷயம். இது போன்ற செய்திகளை தொடர்ந்து பரப்ப வேண்டாம் என கோபத்துடன் கூறினார்.