5 நிமிஷத்துக்கு ரூ. 3500 கொடுத்த நயன்தாரா… இயக்குனர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

5 நிமிஷத்துக்கு ரூ. 3500 கொடுத்த நயன்தாரா… இயக்குனர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் ஆன நயன்தாரா தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார் .

தற்போது ரூ. 10 கோடிக்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக தமிழ் சினிமாவில் நயன்தாரா பார்க்கப்பட்டு வருகிறார். இப்படி நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நயன்தாரா மிகவும் இளகிய மனம் கொண்டவர் என பிரபல இயக்குனர் ஆன கோபி நயனார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ் சினிமாவில் சமூக அக்கறை சார்ந்த மிகச்சிறந்த படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கொடுத்தாலும் தொடர்ந்து அந்த இயக்குனரை அழைத்து டாப் ஹீரோக்கள் கதையை கேட்க யாரும் தயாராக இல்லவே இல்லை. நடிகைகள் தான் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். நயன்தாராவை சந்தித்து அறம் திரைப்படத்தின் கதையை கூறும் போது வெறும் 5 நிமிஷம் தான் படத்தின் கதையை சொன்னேன்.

அவர் என்னுடைய கதையை கேட்டுவிட்டு உடனடியாக தன் பர்சில் இருந்த ரூ. 3,500 பணத்தை கொடுத்து கோச்சுக்காதீங்க கோபி சார்…இப்போதைக்கு என் பரிசில் எவ்வளவு பணம் தான் இருக்கிறது. இதை அட்வான்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு மீதி கதையை கூட என்னிடம் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். இவர்தான் நயன்தாரா என மிகுந்த பூரிப்போடு கூறியிருக்கிறார். கோபி நயனார் அறம் திரைப்படம் வெளியாக கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து தற்போது மனுஷி என்ற திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.