தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனுரித் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும் சன் குழுமத்தின் முக்கிய நிர்வாகியுமான காவ்யா மாறனுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து இவர்களின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, இந்தத் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற விபரங்கள் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. இவர்களின் திருமணம் நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டிலும், அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21 அன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், சன் குழும வாரிசான காவ்யா மாறனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் ஐபிஎல் அணி சார்ந்த வணிக மதிப்புகள் பல நூறு கோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசைத் துறை மற்றும் கார்ப்பரேட் வணிக உலகத்தைச் சேர்ந்த இந்த பிரபலங்களின் இணைவு குறித்த விபரங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தத் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்த அதிகாரப்பூர்வமான முழுமையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.