LTTEயை பில் கிளின்டன் எந்த சந்தர்பத்தில் BAN- செய்தார் தெரியுமா ? Step-by-Step- தகவல் … இதோ

LTTEயை பில் கிளின்டன் எந்த சந்தர்பத்தில் BAN- செய்தார் தெரியுமா ? Step-by-Step- தகவல் … இதோ

8ம் திகதி 1997ம் ஆண்டு அமெரிக்காவின் 42வது ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன், அவர்கள் விடுதலைப் புலிகளை, தடைசெய்கிறார். ஏற்கனவே 15 இயக்கங்களை தடைசெய்து அதன் பட்டியலை கையில் வைத்திருந்த அவர், எப்படி 16வது இடத்தில் விடுதலைப் புலிகளை இணைத்தார் ?  அது எப்படி சாத்தியமானது ? அதாவது பத்திரிகையாளர் மாநாடு நடக்க சற்று நேரம் முன்னதாக, அவர் விடுதலைப் புலிகளை பட்டியலில் இணைக்க என்ன காரணம் ? இந்த விடையம் மனைவி ஹெலரி கிளின்டனுக்கு தெரிந்திருந்தால், அவர் அது நடக்க விட்டு இருக்கவே மாட்டார். காரணம் அவருக்கும் தற்போதைய நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திர குமாருக்கும் இடையே இருந்த நெருக்கம்.

ஆனால் எப்படி இது நடந்தது ? என்பது தொடர்பான முழு விபரங்களையும் இங்கே அதிர்வின் வாசகர்களுக்காக விரிவாகத் தருகிறோம். இந்த சம்பவத்தில் உடன் இருந்த ஒரு நபரின் உண்மையான வாக்குமூலம் இது. 1997ம் ஆண்டு பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தவேளை, உலகில் உள்ள பல இயக்கங்களை தடைசெய்யும் ஒரு மசோதாவை அவர் தயாரித்து அதனை காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்புதலுக்கு கொடுத்திருந்தார். இந்தச் செய்தி உலகளாவிய ரீதியில் பெரும் செய்தியாக வெளியாகி இருந்தது. அன்றைய தினத்தில் கொழும்பில் உள்ள சினமன் கார்டனில் உள்ள வீட்டில், இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இந்தச் செய்தியை கவனித்திக் கொண்டு இருந்தார்.

12 ஏப்பிரல் 1932ம் ஆண்டு பிறந்த லக்ஷ்மன் கதிர்காமர் , 1960ம் ஆண்டு லண்டனில் உள்ள (Oxford)ஆக்ஸ்பேஃ பல்கலைக் கழகத்தில், B.Litt பட்டப் படிப்பை முடித்து இருந்தார். இதே சமயம் 1968ம் ஆண்டு (அதாவது 6 வருடங்களின் பின்னர்) பில் கிளின்டன் ஆக்ஸ்பேஃட் சென்று அதே படிப்பை முடித்துள்ளார். அங்கே தான் பில் கிளின்டனுக்கும், கதிர்காமருக்குமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. சீனியர் என்ற வகையில், கதிர்காமர் கிளின்டன் படிப்பை முடிக்க பல உதவிகளைச் செய்துள்ளார். 1968ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்ற கிளின்டன், அங்கே தீவிர அரசியலில் ஈடுபட்டு, 1992ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆகினார். அன்று நடந்த பதவியேற்ப்பு விழாவிற்கு, அவர் கதிர்காமரையும் அழைத்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது.

இன் நிலையில் தான் கொழும்பில் இருந்த கதிர்காமர், விடுதலைப் புலிகள் மீது கடும் அதிருப்த்தியில் இருந்தார். காரணம் சந்திரிக்காவோடு சமாதான பேச்சுவார்த்தையில், ஈடுபட்டு இருந்த புலிகள், எந்த ஒரு நிலையிலும் விட்டுக்கொடுக்கவே இல்லை. அதுபோக ஆருயிர் சந்திரிக்காவை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் ஒரு காரணம். இதனால் புலிகளை தடைசெய்தால், புலிகளை ஒரு கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியும் என்று நினைத்து. அவர் அவசரமாக அமெரிக்கா புறப்பட தயார் ஆகினார்.

ஆனால் விசா பெறுவதில் சில இழுபறி காணப்பட்டு. இறுதியாக விசா கிடைத்து அமெரிக்காவுக்கு பறக்கிறார் கதிர்காமர். அங்கே வெள்ளை மாளிகையில் இன்னும் சில நிமிடங்களில் பத்திரிகையாளர் மாநாடு நடக்க உள்ளது. அதில் 15 இயக்கங்களை அமெரிக்கா தடைசெய்ய உள்ளதாக அறிவிக்க இருந்தார், அன் நாட்டின் அதிபர் பில் கிளின்டன். பட்டியலில் முழுக்க முழுக்க, இஸ்லாமி இயக்கங்களை போட்டால், அமெரிக்க ஏதோ இஸ்லாமிய இனத்திற்கு எதிரான நாடு என்ற கருத்து உருவாகி விடும் என்ற அச்சம் அங்கே இருந்தது. இதனால் பண்டா-ஆச்சே(இந்தோனேசியா) இயங்கிய புத்த மதம் சார்ந்த இயக்கம், ஒரு கத்தோலிக்க மதம் சார்ந்த இயக்கம் என்று சில இயக்கங்களையும் பட்டியலில் இணைத்து வைத்திருந்தார்கள்.

இன் நிலையில் வெள்ளை மாளிகைக்கு அருகே சென்ற கதிர்காமர், இலங்கை தூதுவராலயம் உதவியோடு அவசரமாக ஒரு தகவலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி உள்ளார்.  இந்த தகவலை முதலில் பெற்றது, அன் நாளில் அமெரிக்காவின் Secretary of State இருந்த Warren Christopher . இதனை அவர் கிளின்டனுக்குச் சொல்ல , இலங்கையில் இருந்து அமெரிக்கா வந்துள்ள தனது நண்பரை பார்க்க, கிளின்டன் உடனே அனுமதி வழங்கியுள்ளார். பத்திரிகையாளர் மாநாட்டுக்கு சற்று முன்னர் பில் கிளின்டனை சந்தித்த , கதிர்காமர் இந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகளையும் இணையுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் புலிகளை இணைத்தால் தான், இலங்கையில் சமாதானம் மலரும் என்றும் கூறியுள்ளார். இது ஒரு சமாதானத்திற்கான பாதை என்றும் கதை அளந்துள்ளார். LTTE என்று கதிர்காமர் கூறியவேளை, “”ஆம் ஆனால் அதன் அர்த்தம் என்ன”” என்று பில் கிளின்டன் கேட்க்க, அப்பொழுது தான் அவர், liberation tigers of tamil eelam என்று அதன் அர்த்தத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாமியர் அல்லாத வேறு இயக்கங்களின் பெயர்களையும் பட்டியலில், இணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பில் கிளின்டனின் வாயில் அவல் பொரி கிடைத்தது போல, இந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது. அந்தச் சமயத்தில் அருகில் அவரது மனைவி ஹெலரி கிளின்டன் இருந்திருந்தால் இது நடைபெற்று இருக்காது. காரணம் ஹெலரி நடத்தி வந்த சட்ட வல்லுனர் நிறுவனத்தில் பணி புரிந்தவர் தான், தற்போதைய நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திரகுமார். அவர் இலங்கையில் தமிழர்கள் எப்படி எல்லாம் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று பல தடவை ஹெலரியிடம் பேசியதால். அன்று முதல் இன்று வரை ஹெலரி கிளின்டனுக்கு தமிழர்கள் மேல் ஒரு இரக்கம் இருந்து வருகிறது.

இதன் காரணத்தால் தான் இறுதிக் கட்டப் போரில்(May-2009), பசுபிப் கட்டளை தளத்தில் இருந்து அமெரிக்க நிவாரண படகு ஒன்றை அனுப்பி காயப்பட்ட மக்களை காப்பாற்ற அவர் ஒரு திட்டத்தை தீட்டி இருந்தார். ஆனால் இந்தியாவின் கடும் எதிர்ப்பால் அது இறுதியில் கைவிடப்பட்டது.  அது சோனியா செய்த ஈனத் தனமான செயல் என்பது பலருக்கும் புரியும். இறுதியில் மாநாட்டுக்கு முன்னதாக தன் கையில் இருந்த பேப்பரில், பேனாவைக் கொண்டு “LTTE”  என்று எழுதிக் கொண்டு செல்கிறார் பில் கிளின்டன். மேடையில் வைத்து 16வது,  தடை செய்யப்படும் இயக்கமாக LTTE அறிவிக்கிறார்.

இதனை அடுத்து கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக மலேசியா என்று பல நாடுகள் புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்து தடைசெய்கிறார்கள். அமெரிக்கா தடைசெய்ததை அடுத்து பெரும் வெற்றியோடு இலங்கை திரும்பிய கதிர்காமரை, சிங்கள மக்கள் அனைவரும் ஒரு ஹீரோவாகப் பார்கிறார்கள். இதனை அடுத்து ஜனாதிபதியாக இருக்கும் சந்திரிக்கா, கதிர்காமரை பிரதமர் ஆக்க திட்டம் தீட்டுகிறார். ஆனால் அன்றைய திகதியில் வெறும் துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகிந்த, இதனை எப்படியாவது, தடுத்து நிறுத்தவேண்டும் என்று திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.

அன்றைய காலகட்டத்தில், சந்திரிக்காவுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்புக்கு நிகரான பாதுகாப்பு கதிர்காமருக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் எங்கே செல்கிறார், எப்போது வருகிறார் போகிறார் என்பது எல்லாமே பரம ரகசியமாகவே இருந்தது. துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகிந்தவுக்கே இது தெரியும். மறு புறத்தில் கதிர்காமர் மீது புலிகள் கடும் வெறுப்பில் இருந்தார்கள். இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்த மகிந்த புலிகளுக்கு, பல ரகசிய தகவல்களை வழங்கி இருந்தார். இது மறைமுகமாகவே நடந்தது. இதனை அடுத்தே புலிகள் தமது பழியை தீர்த்துக் கொண்டார்கள். ஒரு சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து. சிங்களவனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களை அழிக்க நினைப்பவன் எவனுக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை தான் அது.

நம்மில் பலர் கருணா இயக்கத்தில் இருந்து, பிரிந்ததால் தான் இயக்கம் பாரிய பின்னடைவை அடைந்தது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இயக்கம் பாரிய பின்னடைவை சந்திக்க கதிர்காமர் நகர்த்திய இந்த ஒரு காய் தான் காரணம், ஏனைய காரணங்கள் எல்லாமே இதனால் ஏற்பட்ட விளைவு என்று தான் கூறவேண்டும்.

அதிர்வுக்காக
கண்ணன்