அசினுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் அந்த நடிகர் செய்த செயல்!

அசினுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் அந்த நடிகர் செய்த செயல்!

கேரளாவில் பிறந்து வந்த பிரபலம் மலையாள நடிகையான அசின் முதலில் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தெனிந்த சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கினார் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகம் நடித்த நடிகையாக பார்க்கப்பட்டார்கள்.

மலையாள படங்களில் அறிமுகமானாலும் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். தமிழில் அவரது முதல் திரைப்படம் ஆக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து கஜினி, தசாவதாரம், போக்கிரி, வேல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அசின் பிரபல தொழிலதிபரான ராகுல் ஷர்மா என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராகுலின் நெருங்கிய நண்பர் தான் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார். அசின் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் செய்த உதவி. குறித்து ஷிகர் தவானின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் சர்மா கூறியிருப்பதாவது,

என் மகள் பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் அடிக்கடி எனக்கு போன் செய்து குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள் என தெரிவித்தார். கண்டிப்பாக சொல்கிறேன் என்றேன். குழந்தை பிறந்ததும் அவருக்கு தான் முதலில் போன் செய்தேன்.அசினுக்கு குழந்தை பிறந்ததும் கொச்சிக்கு வர விமானத்தை தயாராக வைத்திருந்தார் அக்ஷய் குமார். என் குடும்பத்தார் வந்து சேரும் முன்பே அக்ஷய் வந்துவிட்டார். அதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். என்றார் ராகுல் சர்மா.