பிரிட்டனைச் சேர்ந்த 21 வயதான டேனியல் ஜாக்சன் (Daniel Jackson), பால்கன் பகுதியில் ‘வெர்டிஸ் குடியரசு’ (Free Republic of Verdis) என்ற புதிய நுண்நாட்டைப் பிரகடனம் செய்து அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், சமூக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. பொதுக் கொள்கை மற்றும் தூதரக ஆராய்ச்சி நிறுவனத்தால் (IPPDR) இந்த மனிதநேய விருது அவருக்கு வழங்கிப் பொன்னாடை போற்றப்பட்டது.
ஐவரி கோஸ்ட் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு டேனியல் ஜாக்சன் தலைமையிலான வெர்டிஸ் நிர்வாகம் செய்த நிவாரண உதவிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டானூப் நதிக்கரையில் உரிமை கோரப்படாத சிறிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நுண்நாட்டில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோருக்கு அதிகாரப்பூர்வக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொந்தமாகப் பாஸ்போர்ட் மற்றும் மின்னணு நிர்வாக முறைகளையும் இந்த நுண்நாடு வெற்றிகரமாக உருவாக்கி நடத்தி வருகிறது.
சர்வதேச அளவில் இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காத போதிலும், தங்களது சமூக சேவைகள் தொடரும் என வெர்டிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது பெறப்பட்டுள்ள இந்த விருது மூலம் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவையும் அமைதிப் பணிகளையும் தொடர்ந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.