“துப்பாக்கி” படத்தின் மேக்கிங் வீடியோ…. யாரும் பார்த்திராத வீடியோ இதோ!

“துப்பாக்கி” படத்தின் மேக்கிங் வீடியோ…. யாரும் பார்த்திராத வீடியோ இதோ!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் துப்பாக்கி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. திரைப்படத்தில் ராணுவத்தில் வேலை செய்யும் ஜெகதீஸ் என்ற கேரக்டரில் விஜய் துள்ளலான இளைஞராக நடித்து அசத்தியிருப்பார். இத்திரைப்படம் பல ஆக்ஷன் காட்சிகளுடன் திடீர் திருப்பங்களுடன் வெளியாகி சக்கை போடு போட்டது.

வசூலில் மாபெரும் சாதனை படைத்த இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை பார்த்திராத இந்த வீடியோ ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. முன்னதாக நடிகை காஜல் அகர்வால் என்னுடைய மகனை படம் பார்க்க வைக்கும் முதல் திரைப்படம் அது நான் நடித்த துப்பாக்கி திரைப்படமாகத் தான் இருக்கும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பலரது பேவரைட் திரைப்படமாக துப்பாக்கி திரைப்படம் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.