Posted in

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்; சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் பங்கீடு குறித்து பேச்சு

தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், நடப்பாண்டில் தமிழகத்திற்குத் கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் விஜயவாடாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் முதல்வர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, கோதாவரி – காவிரி இணைப்பு மற்றும் தமிழக எல்லைப் பகுதி நீர்த் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜயவாடாவில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதோடு, அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென் மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தவும், தங்குதடையின்றி நீரைப் பெறவும் இத்தகைய ஆலோசனைகள் உறுதுணையாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆந்திர அரசுடன் நடத்தப்படும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நதிநீர் விவகாரத்தில் இரு மாநிலங்களும் எட்டl உள்ள உடன்படிக்கைகள் தமிழகத்தின் எதிர்காலத் தேவைகளுக்குப் பலனளிக்கும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது.