19 வருஷமா தினமும் சண்டை தான்… தனுஷ் சகோதரி பளீச்!

19 வருஷமா தினமும் சண்டை தான்… தனுஷ் சகோதரி பளீச்!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகர் ஆன தனுஷுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் கார்த்திகா இவர் பிரபலமான மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். கார்த்திகா மருத்துவரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்வப்போது பேட்டிகள் மற்றும் விருது விழாக்களில் தனது சகோதரர் தனுஷை பற்றி மிகவும் பெருமையாக பேசியதன் மூலம் கார்த்திகாவும் தனுஷின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கார்த்திகா தனது கணவருடன் 19 ஆவது திருமண நாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி இருக்கிறார். அவரோடு எடுத்துக் கொண்ட ரொமான்டிக் முத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இனிய 19 வருட திருமண வாழ்க்கை மற்றும் 26 வருட ஒற்றுமை..
சண்டை இல்லாமல் ஒரு நாள் கூட இல்லை. எங்கள் வாழ்க்கை சண்டைகள் இல்லாமல் நான் இல்லை என்று புரிந்து கொண்டேன்.. மீண்டும் எங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என கூறியிருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி ரவியும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.