சுடிக்ஸ்சாவின் சிகிச்சையை நிறுத்தி அவரைக் கொன்ற NHS தற்போது £5,000 பவுண்டுகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது

சுடிக்ஸ்சாவின் சிகிச்சையை நிறுத்தி அவரைக் கொன்ற NHS தற்போது £5,000 பவுண்டுகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது

degenerative disease  என்னும் ஒரு வகை அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் வெறும் 19 வயதே ஆன , சுடிக்ஸ்சா திருமலேஷ்.  இவருக்கு மேற்கொண்டு சிகிச்சை பார்க முடியாது, அதனால் அவரை அப்படியே,  இறந்துபோக விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள் பிரித்தானிய மருத்துவர்கள். இந்த முடிவை எதிர்த்து, சுடிக்ஸ்சாவின் பெற்றோர் கடுமையாக போராடினார்கள். தாம் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து, தமது மகளின் உயிரைக் காப்பாற்ற, நீதிமன்றம் சென்றார்கள்.

ஆனால் கடைசியாக எந்த ஒரு பயனும் இல்லை. அவரை ஒரு தனி அறைக்கு மாற்றி அங்கே எந்த ஒரு சிகிச்சையும் கொடுக்காமல் அவர் இறக்கும் வரை நோவுக்கு மட்டும் மருந்து கொடுத்து வந்தது பிரித்தானியாவின் NHS அமைப்பு. தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல, 16 வயதுக்குப் பின்னர் அவர் பள்ளிசெல்லவில்லை என்றும், அதனால் தாம் கொடுத்த சைல்- பெனிவிட்(சிறுவர்களுக்கான ஊக்கத் தொகையை) திருப்பிக் கட்டுமாறு கோரப்பட்டுள்ளது.

சுடிக்ஸ்சா இறந்த பின்னரும் £5,000 பவுண்டுகளை கட்டவேண்டும் என்று, DWP(Department for Work and Pensions) தினைக்களம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் சுகவீனம் காரணமாக பள்ளி செல்லவில்லை என்று பெற்றோர் கூறினாலும் அதனை ஏற்க்க DWP தினைக்களம் தயாராக இல்லை. பிள்ளை இறந்தது ஒரு பக்கம், இருந்த காசை எல்லாம் மகளைக் காப்பாற்ற செலவு செய்த பின்னர் கூட, தற்போது கையில் எதுவும் இன்றி தவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு இந்த நிலையா ? என்ற தலைப்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.

பல வெள்ளை இன மக்கள் இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார்கள் என்பது பாராட்டத் தக்க விடையம்.