இதுவரை யாரும் வாங்காத சம்பளம்… அட்லீக்கு அடித்த ஜாக்பாட்!

இதுவரை யாரும் வாங்காத சம்பளம்… அட்லீக்கு அடித்த ஜாக்பாட்!

பிரபல இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தற்போது இந்திய சினிமாவில் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். மூலம் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டார் அட்லீ. முதன் முதலில் குறும்படங்களை இயக்கி வந்த இவர் பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இதனால் அட்லீயின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் அட்லியின் புதிய படம் குறித்த தகவலோடு சமூக வலைத்தளங்கள் வெளியாகியுள்ளது. ஆம் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்திற்காக மிகப்பெரிய தொகை அதாவது இந்திய திரையுலகில் இதுவரை யாராலும் வாங்காத ஒரு சம்பளத்தை கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.