வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் தடபுடல்… சுவாரஸ்யமான தகவல் இதோ!

வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் தடபுடல்… சுவாரஸ்யமான தகவல் இதோ!

சரத்குமாரின் மகளான நடிகையான வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளி காட்டினார். வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். இந்த நிச்சயதார்த்தம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மெஹந்தி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திருமணம் ஜூலை மாதம் 2ஆம் தேதி இருவீட்டார் உறவினர்களுடன் தாய்லாந்தில் நடைபெறவுள்ளதாம். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறதாம்.