பேரதிர்ச்சியில் ரசிகர்கள்… அப்படி ஒரு ரோலில் நடிக்கப்போகும் தமன்னா!

பேரதிர்ச்சியில் ரசிகர்கள்… அப்படி ஒரு ரோலில் நடிக்கப்போகும் தமன்னா!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான தமன்னா கிட்டத்தட்ட 34 வயதாகியும் மார்க்கெட் குறையாமல் உச்ச நடிகையாக திகழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பழமொழி படங்களில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த அளவிற்கு உச்ச நடிகையாக தற்போது மார்க்கெட்டின் அந்தஸ்தில் இருக்கிறார்.

கேடி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இவர் சூர்யா, விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஹிந்தியில் தற்போது இரண்டு படங்களின் கமிட்டாகி நடித்த வருகிறார். அது தவிர தெலுங்கில்ஓடேலா எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு தமன்னா வித்யாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சாமியாராக இப்படத்தில் நடித்திருக்கிறார். அதிலும் காவி உடை ,ருத்ராட்ச மாலை, கையில் உடுக்கை சடை போட்ட பின்னல் என முழு முழு சாமியாராகவே மாறி இப்படத்தில் நடித்திருக்கும் தமன்னாவை பார்த்து ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இதோ அந்த வீடியோ: