Posted in

சிறுமிகள் பாலியல் வழக்கு: ஜெம் வீரமணி மகள் அர்ச்சனாவுக்குச் சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன்!

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையைத் தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், சிங்கப்பூர் செல்ல இருந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவை சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணை நடுவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, முழுமையான விசாரணைக்காக மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் அர்ச்சனாவுக்குப் புதிய சம்மனை அனுப்பியுள்ளனர். அதேவேளையில், தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக் காரணத்திற்காகவே அவர் வெளிநாடு செல்ல முயன்றதாகக் கூறி அர்ச்சனாவின் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், உரிய தகவல்களைத் தெரிவித்த பிறகே அவர் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டதாக அர்ச்சனா தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அர்ச்சனா, உடல்நிலை சீரானதும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜராவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த சட்டப்பூர்வ விசாரணைகளை அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.