GOAT ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்… தீயாய் பரவும் வீடியோ!

GOAT ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்… தீயாய் பரவும் வீடியோ!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் , கைலா,ஸ்னேகா , அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி படப்பிடிப்பு தள வீடியோவை தனது இன்ஸ்டாவில் படத்திற்காக இதுவரை எடுத்ததை மொத்தமாக சேர்த்து விடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக கோட் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியது குறிப்பிடத்தக்கது.