விரைவில் ஜிவி பிரகாஷுக்கு இரண்டாம் திருமணம் – தீயாய் பரவும் தகவல்!

விரைவில் ஜிவி பிரகாஷுக்கு இரண்டாம் திருமணம் – தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல இசை ஜோடிகளான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பள்ளி பருவத்திலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பல வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இவர்களுக்கு அன்வி அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தற்போது 4 வயதாகிறது. திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்கள். இவர்களது விவாகரத்து செய்தி பேரதிர்ச்சியாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பேசி இருக்கும் பிரபல பத்திரிகையாளரான சுபைர் ஜிவி பிரகாஷ் சைந்தவிக்கு சின்ன வயசு தான் . ரெண்டு பேருக்கும் ஒரு கருத்து வேறுபாடு மறுபடியும் அவங்க சேர்ந்து வாழ்றதுக்கு சான்ஸ் இருக்கு . ஆனால் இரண்டாம் திருமணம் என்பது ஜிவி பிரகாஷ் கையில் தான் இருக்கு.

காலம் தான் என்ன என்பதை முடிவு செய்யும். இப்போ இவங்க ரெண்டு பேருமே காயத்தில் இருப்பதால அவங்களுக்கு கொஞ்சம் மன அமைதி தேவைப்படுது. ஜிவி பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி அப்படின்னுதான் நான் நினைக்கிறேன். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே அது உண்மையாக இருக்கும் என அவர் கூறியிருக்கிறார் இதை அடுத்து ஜிவி பிரகாஷின் இரண்டாம் திருமணம் செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.