மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் படிப்படியாக வளர்ந்து தனது விடா முயற்சியால் இன்று இந்த அளவுக்கு நட்சத்திர அந்தஸ்தை பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மார்க்கெட்டை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கியும் நயன்தாரா இன்னும் தனது மார்க்கெட்டை விடாமல் அதே நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருப்பது தான் அவரது தனி அடையாளமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.அதாவது நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக அவர் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க கமிட் ஆக இருக்கிறாராம்.

இதற்காக முதற்கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் நயன்தாரா பங்கேற்றிருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகிறது . இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அது மட்டுமில்லாமல் நயன்தாரா படத்திற்காக ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் முன்னதாக பில்லா, ஏகன், ஆரம்பம்,விசுவாசம் உள்ளிட்ட படங்கள் இந்த ஜோடி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.