மோடிக்கு பலத்த பின்னடைவு தனிப் பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க முடியாமல் போகும் நிலை

மோடிக்கு பலத்த பின்னடைவு தனிப் பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க முடியாமல் போகும் நிலை

தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகி வரும் நிலையில். தமிழ் நாட்டில் மட்டும் 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னணி வகிக்கிறது. அதாவது அனைத்து இடங்களிலும் முன்னணி வகிக்கிறது. இதேவேளை இந்தியாவில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளது. இதில் தெரிவாகும் உறுப்பினர்களில், சுமார் 272 பேர் இருந்தால் மட்டுமே, உறுதியாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது மோடியின் பஜக 240 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அவர்கள் ஆட்சி அமைக்க 32 ஆசனங்கள் தேவை. அதனை வெல்ல இனி பஜக வால் முடியாது என்று கூறப்படுகிறது.

ஏன் எனில் காங்கிரஸ் 99 ஆசனங்களை கைப்பற்றி உள்ள நிலையில், சமஜ்வாஜி கட்சி 37 ஆசனங்களையும் , மற்றும் திரினாமுல் காங்கிரஸ் 29 ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது. மேலும் 72 தொகுதிகளின் முடிவு வெளியாக உள்ள நிலையில். இதில் 32 ஆசனத்தை மோடியின் கட்சி கைப்பற்ற வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் 32 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, மோடி அரசு அமைக்க வேண்டும் என்றால், ஏதாவது ஒரு கட்சியோடு சமரசம் பேசவேண்டிய நிலையில் இருக்கிறார்.

இருப்பினும் இதர 3 கட்சிகளைக் கூட்டினால் கூட 165 ஆசனங்களே வருகிறது. இதனால் மோடியின் பஜக பல விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு ஒரு தேசிய கட்சியோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் இனி மோடியால் சுயமாக ஆட்சியை அமைக்க முடியாது. கூட்டணியே வழி என்றாகிவிட்டது. அந்த கூட்டணிக் கட்சியின் கையில் தான், மோடியின் குடுமி இருக்கும்.