அமெரிக்காவுடனான மோதல் மற்றும் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தங்களது வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான 2,000 கிலோமீட்டர் எல்லைக் கட்டுப்பாட்டை முறைப்படி நீக்குவதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. மேலும், எதிரிகள் எதிர்பார்க்காத இடங்கள் மற்றும் அமைப்புகளில் ‘வியக்கத்தக்க’ (astonishing) பதிலடித் தாக்குதல்களை நடத்தும் திறன் தங்களுக்கு இருப்பதாக ஈரானிய ராணுவப் பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் நிலப்பரப்பு மற்றும் காஸ்பியன் கடல் வழியிலான ஆயுத விநியோகப் பாதைகளைக் முடக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய சிறப்புப் பணிக்குழுவை (Task Force) அமைத்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏவுகணை எல்லை வரம்பு நீக்கப்பட்டதன் மூலம் ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் ஆசிய பிராந்தியங்கள் ஈரானிய ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவதாக சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் தொடரும் தடைகள் மற்றும் தாக்குதல்களால் சர்வதேச வர்த்தகப் பாதையில் பதற்றம் நீடிக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை கடல்சார் பிரச்சனைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் நிலை குறித்து சர்வதேச அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
ஈரானின் இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.