குழந்தையின் முகத்தை காட்டிய ஸ்ரீதேவி அசோக் – குவியும் வாழ்த்துக்கள்!

குழந்தையின் முகத்தை காட்டிய ஸ்ரீதேவி அசோக் – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்தார்.

அது மட்டுமில்லாமல் இவர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தின் மூலமாகத்தான் தனது திரைப்படத்தை தொடங்கினார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தமிழில் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

இதனிடையே சன் டிவியில் ஒளிபரப்பாக இருந்த பூவே உனக்காக விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு செம்பருத்தி சீரியல் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். ராஜா ராணி சீரியலில் கொடூரமான வில்லியாகவும் நடித்திருந்தார் .

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமாக பார்க்கப்பட்ட இவர் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் முன்னதாக இவருக்கு சித்தாரா என்று அழகிய பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் கர்ப்பமான ஸ்ரீதேவிக்கு அண்மையில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஈலையில் தற்போது குழந்தையின் முகத்தை காட்டி இருக்கிறார்கள் இந்த தம்பதி. தாயும் சேயும் நலமாக இருப்பதாக இந்த புகைப்படத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.