காஜல் அகர்வாலின் மகனா இது? கொழுக் மொழுக்குன்னு அழகா இருக்கானே!

காஜல் அகர்வாலின் மகனா இது? கொழுக் மொழுக்குன்னு அழகா இருக்கானே!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான இந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

குறிப்பாக இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் தான் அதிக வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் சூர்யா கார்த்தி, தனுஷ், விஜய், அஜித் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் இடத்தைப் பிடித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு நீல் என்று அழகிய மகன் பிறந்தார். தனது மகனின் புகைப்படங்களை பெரிதாக சோசியல் மீடியாக்களில் வெளியிடாமல் காஜல் அகர்வால் இருந்து வந்த நிலையில் தற்போது அவரின் மகனின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி ரசிகர்கள் எல்லோருது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொழுக் மொழுக்குன்னு குழந்தை அழகாக இருக்கிறதாக நெட்டிசன்கள் வர்ணித்து இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.