இன்று பிறந்தநாள் கொண்டாடும் கே. எஸ். ரவிக்குமார் சொத்து – எத்தனை கோடி தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கே. எஸ். ரவிக்குமார் சொத்து – எத்தனை கோடி தெரியுமா?

தொட்டதெல்லாம் ஹிட் என தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி 90ஸ் மற்றும் 20ஸ் காலகட்டத்தின் ஆரம்பத்தில் கே எஸ் ரவிக்குமார் பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். இவரால் இவ்வளவு பெரிய ஹிட் வெற்றி இயக்கியது? என இன்றுள்ள வாரிசுகள் பார்த்து வியக்கும் அளவுக்கு இவர் பல்வேறு மாபெரும் வெற்றி படங்களை இயக்கி சிறப்பான இயக்குனராக புகழ்பெற்றிருக்கிறார்.

குறிப்பாக 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தை இயக்கி அறிமுகமான கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து நாட்டாமை, அவ்வை சண்முகி, படையப்பா, மின்சார கண்ணா, தசாவதாரம் ,மன்மத அம்பு உள்ளிட்ட மாபெரும் வெற்றி திரைப்படங்களை இயக்கிய முத்தான இயக்குனராக பார்க்கப்படுகிறார் .

இது தவிர குணச்சித்திர நடிகர் ஆகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 66 வது பிறந்த நாளை கொண்டாடும் கே எஸ் ரவிக்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்கவைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 70 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான பங்களா இருக்கிறது. மேலும் 2. 4 ஏக்கரில் கப்பல் போன்ற வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறாராம். அத்துடன் பல சொகுசு காசு கார்களை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.