அவனுக்கு கருணை காட்டாதீங்க… கொந்தளித்த அரசியல் பிரமுகர்!

அவனுக்கு கருணை காட்டாதீங்க… கொந்தளித்த அரசியல் பிரமுகர்!

பிரபல யூடியூபர் ஆன இர்பான் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சோதனை செய்து பார்த்து அதை பார்ட்டி வைத்துக் கொண்டாடி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

இதை அடுத்து அவருக்கு குற்ற தண்டனையாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறையிடம் மன்னிப்பு கேட்ட இர்பான் அந்த வீடியோவையும் நீக்கி இருந்தார்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், இந்த சர்ச்சை பற்றி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, யூடியூபர் இர்பான் செய்தது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். எனவே இர்பானுக்கு கருணை காட்டாமல் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கொந்தளித்துள்ளார்.