சிறுமி பாடுவதை மெய்மறந்து ரசித்த கிங்ஸ்லி – வீடியோ இதோ!

சிறுமி பாடுவதை மெய்மறந்து ரசித்த கிங்ஸ்லி – வீடியோ இதோ!

பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி பல வருடங்களுக்கு முன்னரே நடிகராக திரைப்படத்துறையில் அறிமுகமானாலும் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் யார் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

இப்படியான ஒரு சமயத்தில் தான் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் காமெடி நடிகராக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி அவரது காமெடி மக்கள் இடையே பேசப்பட்டது.

இதன் மூலம் அவர் பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. அதன் பின் நெற்றிக்கண் திரைப்படத்தின் நடித்திருந்தார். பின்னர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

இதனையே திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் . 50 வயதில் திருமணம் செய்து கொண்டதால் ரெடின் மோசமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அதையெல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கிங்ஸிலி, சிறுமியொருவர் பாடுவதை ரசித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.