பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் மே-18க்கு உருக்கம்- விசேட அறிக்கை வெளியிட்டார் !

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் மே-18க்கு உருக்கம்- விசேட அறிக்கை வெளியிட்டார் !

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர் டேவிட் கமரூன் அவர்கள், மே 18க்கான தனது உருக்கமான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். முன்னர் அவர் பிரித்தானிய பிரதமராக இருந்தவேளை, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அந்தவேளை லண்டனில் வைத்து பல தமிழ் செயல்பாட்டாளர்களை சந்தித்து தாம் இலங்கை செல்ல முன்னர், அங்கே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அதன் அடிப்படையில் தமிழர்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால், தமிழர் பகுதிக்கு செல்லுங்கள். நிலமை தன்னால் புரிந்துவிடும் என்று கூறினார்கள். அதனை ஏற்றுக் கொண்ட டேவிட் கமரூன், யாழ் விஜய்ம் ஒன்றை மேற்கொண்டு, அங்கே சென்று நிலமையை நேரில் கண்டறிந்தார். அந்த வகையில் என்றும் தமிழர்களின் வலிகளை அறிந்த ஒரு தலைவராக டேவிட் கமரூன் அவர்கள் இருக்கிறார்.

தற்போது ரிஷி சுண்ணக் அரசில், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சராக இருக்கிறார் டேவிட் கமரூன். இன்று அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக அறிக்கை ஒன்றில் மே 18 தொடர்பாக தனது கருத்தை காத்திரமாக வெளியிட்டுள்ளார். மே 18 நடந்த மனிதப் படுகொலை மற்றும் காணமல் ஆக்கப்பட்டோரின் , விடையம் தொடர்பாக நீதியான விசாரணை தேவை என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தி, தமிழர்களின் பக்கம் தான் இருப்பதை மேலும் உறுதிசெய்துள்ளார். தமிழர்களுக்கான கான்சர்வேட்டிவ் அமைப்பினர்(BTC) ஊடாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Source : https://www.tamilconservatives.com/

athirvu