Posted in

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்வு: அமைச்சர் ஜெகதீஸ்வரி அளித்த முக்கிய விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர்ப் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, முதலமைச்சர் விஜய் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அவர் கூறினார்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட உரிமைத் தொகையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் இருந்ததால் தற்போதைய தரவுகளைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே விண்ணப்பித்தும் தொகை கிடைக்காத தகுதியுள்ள பயனாளிகளின் விண்ணப்பங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சரிபார்ப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பயனாளிகள் யாருக்கும் எந்தவொரு குறையும் இன்றி நிதி சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழில்நுட்பச் சரிபார்ப்புகள் நிறைவடைந்ததும் உரிய முறையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பைத் தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.