50 வயசு நடிகையுடன் பிரேக்கப்… பாலிவுட்டின் பரபரப்பான செய்தி!

50 வயசு நடிகையுடன் பிரேக்கப்… பாலிவுட்டின் பரபரப்பான செய்தி!

பாலிவுட் சினிமாவில் பிரபல வாரிசு நடிகரான அர்ஜுன். கபூர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் 50 வயது நடிகையான மலாய் அரோராவை காதலித்து வந்திருந்தார் . இவர்கள் இருவரும் ரகசிய முறையில் வாழ்ந்து வந்ததாகவும் பாலிவுட் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் மகனின் காதலுக்கு போனி கபூர் மிகுந்த எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தார் . ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மகன் வயது நடிகருடன் இப்படியா இருப்பது என மலாய்கா அரோரா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.

அதையும் தாண்டி இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது மலாய்கா அரோராவை அர்ஜுன் கபூர் பிரேக்கப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. மலாய்கா ஏற்கனவே பிரபல நடிகரான சல்மான் கானின் அண்ணன் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த ஒரு மகன் வாலிப வயதை எட்டி இருக்கும் நிலையில் இவர் அர்ஜுன் கபூருடன் காதலில் இருப்பது பல விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.