4 வருஷமா அஜெஸ்ட் பண்ணேன்… கணவரை விவாகரத்து செய்த செயல் நடிகை பகீர்!

4 வருஷமா அஜெஸ்ட் பண்ணேன்… கணவரை விவாகரத்து செய்த செயல் நடிகை பகீர்!

தமிழ் தொலைக்காட்சிகளில் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

குறிப்பாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி பகீர் கிளப்பி இருக்கிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணம் என கூறும் போது எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகிய ஓராண்டிலேயே பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

என்னை சீரியல்களில் நடிக்க கூடாது என என்னுடைய கணவர் கட்டாயப்படுத்தினார். மகன் பிறந்து இரண்டாவது மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தேன். அந்த அளவுக்கு நான் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டேன்.

பின்னர் பத்து நாட்கள் ICU வில் இருந்தேன். என்னை மனரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தினார். ஒரு கட்டத்திற்கு மேல் 4 வருடம் அவருடன் பொருளாதார ரீதியாகவும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பிடிக்காத வாழ்க்கையை விருப்பமின்றி அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன்.

சரியாக விடும் என்று எண்ணத்தில் இருந்தேன். ஆனால் நாளுக்கு நாள் அவர் டார்ச்சர் அதிகரித்தது. இதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன் என கிருத்திகா அண்ணாமலை கூறி இருக்கிறார்.