எல்லையில்லா காதல்…. பிறந்தநாளில் மைனா வெளியிட்ட அழகான புகைப்படம்!

எல்லையில்லா காதல்…. பிறந்தநாளில் மைனா வெளியிட்ட அழகான புகைப்படம்!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி முதன் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலமாக மைனாவாக எல்லோரது கவனத்தை ஈர்த்து பிரபலமானார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா3 ,நம்ம வீட்டு பிள்ளை, பெட்ரூம் ,அரண்மனை 3 ,விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் மைனா நந்தினி அவர் கார்த்திகேயன் என்பவரை கடந்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் கார்த்திகேயன் தற்கொலை செய்துக்கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே மரணித்து விட்டார். அதன் பிறகு யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட மைனாவுக்கு ஒரு மகன் பிறந்தார். தற்போது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இன்று பிறந்த நாளை கொண்டாடும் மைனா நந்தினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.