ஜெயம் ரவி -ஆர்த்தி ஜோடியை அழகாக போட்டோ எடுத்த விஜய் -வைரல் புகைப்படம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி ஜோடியை அழகாக போட்டோ எடுத்த விஜய் -வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக புகழ் பெற்றிருக்கும் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தில் நடித்த ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுக்க தனது பெயரையே ஜெயம் ரவி என அதன் மூலம் தான் மாற்றிக்கொண்டார். அதன்பிறகு இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அந்த திரைப்படமும் இவருக்கு மார்க்கெட் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மற்றும் ஜெயம் ரவியின் சினிமாக்களில் மிக முக்கிய திறப்பு முனையாகவும் அந்த படம் அவருக்கு அமைந்தது. தொடர்ந்து தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , பூலோகம், நிமிர்ந்து நில், ஆதி பகவன், எங்கேயும் காதல், பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம் , சம்திங் சம்திங் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் .

இதனிடையே பிரபல தயாரிப்பாளரின் மக்களான ஜெயம் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் இதுவரை ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொள்ளாத போட்டோவை வெளியிடுங்கள் என கேட்டதற்கு அவர் ஜெயம் ரவியின் மடியில் அமர்ந்து ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் , அந்த புகைப்படத்தை நடிகர் விஜய் எடுத்ததாகவும் அந்த பதிவில் கூறியிருப்பார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.