சமந்தா பாவம்…… மாஜி கணவர் அந்த நடிகையுடன் ரகசிய உறவு… சிக்கிய புகைப்படம்!

சமந்தா பாவம்…… மாஜி கணவர் அந்த நடிகையுடன் ரகசிய உறவு… சிக்கிய புகைப்படம்!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து அங்கு பிரபலமான நடிகையாகவும் பார்க்கப்பட்டார். அதேபோல் தமிழில் பல முன்னணி நடிகர்கள் ஆன விஜய் சூர்யா அஜித் என டாபிராக்களுடன் ஜோடி போட்டு நடித்து இங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

இதனிடையே தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது .

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தா திருமணம் விவாகரத்து பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இப்படியான நேரத்தில் அவரது மாஜி கணவரான நாக சைதன்யா வேறு ஒரு நடிகையுடன் ரகசிய உறவில் இருந்து வருகிறார். ஆம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துலிபாலா உடன் அவர் பல நாட்களாக டேட்டிங் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இருவரும் ஐரோப்பாவில் இருவரும் டேட்டிங் செய்து வருவது அம்பலமாகியிருக்கிறது. ஐரோப்பாவில் இருவரும் ரகசியமாக சென்றுள்ள புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாக்கி நாக சைதன்யாவும் சோபிதாவும் விளக்கம் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.