நெருங்கி வருவாய்… நெருங்கி வருவாய் – ரொமான்ஸில் மூழ்கிய விக்கி – நயன்!

நெருங்கி வருவாய்… நெருங்கி வருவாய் – ரொமான்ஸில் மூழ்கிய விக்கி – நயன்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் ஆன நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்க துவங்கி விட்டார்கள் .கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இவர்கள் பின்னர் பல வருடங்கள் கழித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

நட்சத்திரபலங்கள் ஒன்று கூடி நண்பர்கள், தோழர்கள் என அனைவரும் சேர்ந்து இவர்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வைத்தார்கள் .இவரது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது.

ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் பலரும் இவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து இருந்தார்கள் திருமணமாகி சில மாதங்களிலேயே நயன்தாரா வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவ்வப்போது குழந்தை மற்றும் குடும்பங்களுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது இருவரும் ரொமான்டிக் மூடில் மூழ்கி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு “மாலை நிலவின் மரகத மஞ்சள்எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில் ” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.