4 மாத கர்ப்பம் கலைந்துவிட்டது…. கதறி அழுத நடிகை நமீதா!

4 மாத கர்ப்பம் கலைந்துவிட்டது…. கதறி அழுத நடிகை நமீதா!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை நமீதா. கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மச்சான் என அழைத்து மனதை மயக்கி இழுத்தவர் நடிகை நமீதா. இவர் தொடர்ச்சியாக தமிழ் , கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

ஒவ்வொரு படத்திலும் தனது தாறுமாறான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்ததன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே நமீதா மக்களின் ரசனைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார் . இவரது கவர்ச்சி அழகுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர். இதனிடையே வயதாக பின்னர் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் குறைந்து போனது.

இதை அடுத்து சினிமாவில் சில காலம் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமீதா. தற்போது 43 வயதாகும் நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனக்கு 4 மாத கர்ப்பம் கலைந்து விட்டதாக மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் .

அதாவது, எனக்கு கல்யாணமாகி 2021ல் முதன்முறை கர்ப்பமாகினேன். அப்போது 4 மாசத்தில் கர்ப்பம் கலைந்துவிட்டது. 2 மாதம் எனக்கு ஏதும் தெரியவில்லை. பின் தான் எனக்கு தெரிந்தது. அதனால் மன உளைச்சலில் இருந்தேன். அதன்பின் தான் கர்ப்பமாகி இரட்டை குழந்தை பிறந்தது என்று நமீதா தெரிவித்துள்ளார்.