தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளில் பயணித்து தற்போது தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள நாஞ்சில் சம்பத், அக்கட்சியின் ஆட்சி குறித்தும் தலைவர் விஜய் குறித்தும் விமர்சித்ததாகச் சில போலிச் செய்திகள் பரப்பப்பட்டன. சமூக வலைதளப் பக்கங்களில் தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தித் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் இந்தத் தவறான தகவல்களுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார். தவெக தலைவர் விஜய்யின் மக்கள் பணி மற்றும் அவரது அரசியல் ஆளுமை மீது தனக்கு எப்போதும் முழுமையான நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் தன்னை முடக்கும் நோக்கத்துடனும், கட்சிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இதுபோன்ற வததிகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்யின் தலைமையின் கீழ் தான் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் வலியுறுத்தினார். அரசியல் எதிரிகளின் சதிச் செயல்களுக்குத் தொண்டர்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் பரவிவரும் இதுபோன்ற போலிச் செய்திகளைத் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் எனத் தரப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நாஞ்சில் சம்பத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.