மகன்களுடன் chill out… வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் விக்கி – நயன் ஜோடி!

மகன்களுடன் chill out… வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் விக்கி – நயன் ஜோடி!

நடிகை நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து அவர்களால் ஏமாற்றப்பட்டார். இதனால் வாழ்க்கையில் காதல், திருமணம் இது எதுவுமே வேண்டாம் என வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை என்ன என்பதை அழகாக காட்டியவர் தான் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கிய போது நயன்தாரா அவர் மீது காதலில் விழ ஆரம்பித்தார். பின்னர் 8 ஆண்டுகள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி சில மாதங்களிலேயே வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. அவ்வப்போது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வெளிநாடுகளுக்கு மகன்கள் உடன் ட்ரிப் அடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது செல்ல மகன்களுடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக் பிச்சி உதறுகிறது. மகன்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்களா என அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது.