மகனுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா – கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

மகனுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா – கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

தென்னிந்த சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என மிகப் பெரிய அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இவர் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். இரண்டாவது படமே ரஜினிகாந்த் உடன் நடித்ததால் இவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து விட்டது. தொடர்ச்சியாக அஜித் விஜய் சூர்யா தனுஷ் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார் .

இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அப்போது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா தற்போது தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி இருக்கிறார். இதோ அந்த வீடியோ.