“என் இதயத் துடிப்பிற்கு பிறந்தநாள்” – பிரியங்கா தேஷ்பாண்டே வாழ்த்து!

“என் இதயத் துடிப்பிற்கு பிறந்தநாள்” – பிரியங்கா தேஷ்பாண்டே வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுபளினியாக இருந்து வருபவர் தான் விஜே பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதில் பிரபலமான ஆங்கராக இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது நெருங்கிய நண்பரான மாகாபாவின் சிபாரிசின் பேரில் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்து பிரியங்காவுக்கு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கர் ஆக இருந்து வருகிறார் .

விஜய் டிவியில் வருவதற்கு முன்னர் ஜீ தமிழ் சன் டிவி சுட்டி டிவி சன் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது விஜே பிரியங்கா தனது தம்பி மகளின் இரண்டாவது பிறந்தநாளில் அவருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு நடிகர் சித்தார்த் மற்றும் பாவினி ரெட்டி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.