கமலுக்கு பால் அபிஷேகம்… களைகட்டும் “இந்தியன்” ரீ ரிலீஸ்!

கமலுக்கு பால் அபிஷேகம்… களைகட்டும் “இந்தியன்” ரீ ரிலீஸ்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். 1996ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர் ,கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி அப்போதே மாபெரும் வசூல் ஈட்டி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்ததோடு இன்று வரை மக்களுக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. 1995 இல் வெளிவந்த ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தை முறியடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படமாக இந்தியன் முத்திரை பதித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக ரிலீசுக்கு காத்திருக்கும் வேளையில் இந்தியன் படத்தின் ரீ ரிலீஸ் தற்போது திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் இந்தியன் திரைப்படத்தின் முதல் காட்சி பார்க்க வந்தபோது அப்படத்தின் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்த புகைப்படங்களை instagram-ல் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

athirvu