Posted in

மூன்றாம் உலகப்போர் அபாயம்? உக்ரைன் போரை வெல்ல புதின் எடுக்கப்போகும் ‘மெகா’ அதிரடி முடிவு: கசிந்தது ரகசிய திட்டம்!

உக்ரைன் உடனான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் சூழலில், ரஷ்யா தனது ராணுவப் பலத்தை மீண்டும் வலுப்படுத்தவும், போரின் போக்கை மாற்றவும் வரும் மாதங்களில் ஒரு மிகப்பெரிய ‘மக்களைத் திரட்டும்’ (Mass Mobilization) கட்டாய ராணுவப் பயிற்சி திட்டத்தைத் தொடங்க அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச உளவுத்துறை மற்றும் அரசியல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. களத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மனிதவள இழப்புகள் மற்றும் உக்ரைனின் ஆளில்லா விமானத் (Drone) தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை உடைக்க புதின் இந்த தீவிரமான மற்றும் ஆபத்தான முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அட்லாண்டிக் கவுன்சில் (Atlantic Council) மற்றும் செக் குடியரசு அதிபர் பெட்ர் பாவெல் வெளியிட்டுள்ள சமீபத்திய பாதுகாப்பு ஆய்வுகளின்படி, ரஷ்யாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த மாபெரும் ராணுவத் திரட்டல் அறிவிப்பை புதின் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரஷ்யா தனது சிறைக்கைதிகள் மற்றும் மிக அதிக ஊதியம் தருவதாகக் கூறி சேர்த்துக் கொண்ட தன்னார்வலர்களை மட்டுமே போர்க்களத்திற்கு அனுப்பி வந்தது. ஆனால், தற்பொழுது தன்னார்வலர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்துவிட்டதால், சாதாரண ரஷ்யக் குடிமக்களைக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கும் நிலைக்கு கிரெம்ளின் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2022 செப்டம்பரில் புதின் அறிவித்த தற்காலிக ராணுவத் திரட்டலின் போது, சுமார் 10 லட்சம் ரஷ்ய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கசப்பான அனுபவம் உள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு புதிய பொதுத் திரட்டலை அறிவிப்பது ரஷ்ய மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், உள்நாட்டு ஸ்திரமின்மையையும் உருவாக்கும் என்றாலும், உக்ரைனில் தோல்வியைத் தவிர்க்க புதின் இந்த இறுதி ஆயுதத்தைக் கையில் எடுக்கத் துணிந்துள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள இளைஞர்களின் விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் வருகைப்பதிவேடுகள் (Electronic Registry) ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் தங்களுக்குப் சாதகமற்ற தற்காலிக அமைதி உடன்பாடுகளை புதின் தொடர்ந்து நிராகரித்து வருவதால், இந்த ராணுவத் திரட்டல் நடவடிக்கை நேட்டோ (NATO) நாடுகளுடனான மோதலை நேரடியாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா தனது முழுப் பலத்தையும் கொண்டு உக்ரைனை முழுமையாகக் கட்டுப்படுத்த முற்பட்டால், அது ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி ஒரு ‘மூன்றாம் உலகப் போராக’ (World War 3) வெடிக்கும் அபாயம் உள்ளதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *