Posted in

ரஷ்யா-உக்ரைன் பரஸ்பர ட்ரோன் தாக்குதல்: 6 பேர் பலி, 31 பேர் படுகாயம்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் எல்லையோரப் பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து பரஸ்பரம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் பெல்கரோட் பிராந்தியத்தில் குடியிருப்புகள் சேதமடைந்து 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல, உக்ரைனின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய இரு நாட்டு அதிகாரிகளும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். ட்ரோன் தாக்குதல்களை வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் முறியடித்துள்ளதாக இரு தரப்பு ராணுவமும் அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த 31 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் எல்லைப் பாதுகாப்புப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் சீரமைப்புப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.