ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தாசியா (Anastasia) என்ற பெண்ணுக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் குமார் (Vishal Kumar) என்பவருக்கும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து, காதலனை நேரில் சந்தித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த அந்தப் பெண் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். விமானம் மூலம் புதுதில்லி வந்திறங்கிய அவரை விஷால் நேரில் சென்று வரவேற்றதுடன், தனது சொந்த ஊரான பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பீகாரின் கிராமப் பகுதிக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணைக் கண்ட அக்கம் பக்கத்தினரும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் வரவேற்பு அளித்துள்ளனர். கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாடுகளைக் தாண்டி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ள விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊடகங்களின் வாயிலாக வெளிவந்த இந்தச் காதல் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை விஷாலின் குடும்பத்தினர் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உள்ளூர் இளைஞரைக் கரம்பிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்த இந்த வெளிநாட்டுப் பெண்ணின் விசா மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்கள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளன.