ராமன் சீதையாக – ரன்பீர் கபூர், சாய்பல்லவி – தீயாய் பரவும் புகைப்படம்!

ராமன் சீதையாக – ரன்பீர் கபூர், சாய்பல்லவி – தீயாய் பரவும் புகைப்படம்!

நேச்சுரல் பியூட்டியாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்ப்பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பிரபலத்தையும் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது,. இந்நிலையில் தற்போது இந்தியில் அறிமுகமாக இருக்கும் சாய்பல்லவி முதன்முறையாக அவர் நடிக்கும் படமே பாலிவுட் ஸ்டார் நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாய் பல்லவி சீதாவாக நடிக்க ரன்பீர் கபூர் ராமனாக நடிக்கிறார். ராமாயணம் கதையை மையமாக கொண்டெடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இதில் சீதை ராமனாக ஜோடியாக இருக்கும் ரன்பீர் சாய்பல்லவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி தீயாய் பரவி வருகிறது.