நட்சத்திர ஹீரோக்களின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… என்ன காரணம் தெரியுமா?

நட்சத்திர ஹீரோக்களின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… என்ன காரணம் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் .முதல் படத்திலேயே நேச்சுரல் பியூட்டியாக மலர் டீச்சர் ஆக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார் சாய்பல்லவி.

தெலுங்கு, மலையாளம், மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததாகவும், அப்படங்களில் தனக்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் தகவல் ஒன்று பரவியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய்பல்லவியிடம் கேட்டதற்கு, அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க தனக்கு எந்த ஒரு வாய்ப்பு தேடி வரவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் என அவர் கூறியிருக்கிறார்.