மாமனார் மூஞ்சில் ரூ. 250 கோடி தூக்கி எறிந்த சமந்தா – ஏன் தெரியுமா?

மாமனார் மூஞ்சில் ரூ. 250 கோடி தூக்கி எறிந்த சமந்தா – ஏன் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகராக நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

ரசிகர்களின் ஃ பேவரைட் ஆன ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்து விவாகரத்து செய்து முறையாக பிரிந்து விட்டார்கள். இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நாக சைதன்யாவின் குடும்பத்தார் சமந்தாவிற்கு ரூ. 250 கோடி ஜீவனாம்சமாக கொடுக்க முன் வந்தனர்.

அந்த பணத்தை சமந்தா வாங்க மறுத்ததாகவும் அதற்காக அவர் தெளிவான விளக்கத்தையும் தெரிவித்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது . அதாவது நான் சிறுவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். 500 ரூபாய் 400 ரூபாய்க்கு கூட வெல்கம் கேர்ளாக நான் பணியாற்றி இருக்கிறேன். என்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். இந்த பணம் எனக்கு தேவையில்லை எடுத்துக்கொண்டு போங்கள் என முகத்தில் அடித்தார் போல் தனது மாமனாரிடம் கூறியதாக வதந்தி செய்திகள் வெளியது.

இந்த செய்தி குறித்து பேசியுள்ள சமந்தா, ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தபின் பார்த்து வருத்தப்பட்டேன். மேலும் எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டால் என்னிடம் எதுவுமே இல்லை என அவர்களிடம் காட்டுவதற்காக காத்திருந்தேன் என நகைச்சுவையாக பேசியிருந்தார்.