ஆண் குழந்தை அப்பாவானார் சிவகார்த்திகேயன்… குவியும் வாழ்த்துக்கள்!

ஆண் குழந்தை அப்பாவானார் சிவகார்த்திகேயன்… குவியும் வாழ்த்துக்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினா திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன் .

தொடர்ச்சியாக மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப் பிள்ளை ,மாவீரன் ,அயலான் இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை முதலில் பிறந்தார். அதன் பின்னர் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பா பெயரான குகன் என்பதை சூட்டி அழகு பார்த்தார். இந்நிலையில், தற்போது 3வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.